Friday, December 08, 2006

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே!

மனித இனத்தைப் பற்றி இந்து மதத்தின் உயர்ந்த ரிஷிகளில் ஒருவர் கூறுகையில் ....
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்
..
என்று பரிணாமவியலை உணர்ந்து பாடுகிறார்.

இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக இந்த பேரண்டம் தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. ஒவ்வொரு காலத்திலும் இந்தமதத்தில் பெரும் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். இனிமேலும் இந்த இந்துமதத்தில் இறையருள் பெற்றவர்கள் வருவார்கள். ஒரு சில மதங்களில் இவர்தான் இறுதியானவர் அவர்தான் இறுதியானவர் என்றும், இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள். அது போலன்றி, அணுவிலும் பேரண்டத்திலும் உறையும் வரையறுக்க முடியாத இறையை வரையறுக்க முடியாது என்றே ஒப்புக்கொள்ளும் இந்துமதம், சமுதாயத்தில் அல்லன நீக்கி நல்லன போற்றும் ஞானியரையும் ரிஷிகளையும் ஒவ்வொரு காலத்திலும் இறையருளால் பெற்றே வந்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இந்துமதம் என்றும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இந்துமதம்.

அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே இறை தான், அது அணுவிலிருந்து அண்டம் வரை யாவிலும் வியாபித்துள்லது. அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?

உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது. தான் என்னும் அகங்காரத்தினை விலக்கி, தான் உருவாக்கிய மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, தான் நம்பும் மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான் என்ற பேருண்மையை இந்து மதம் உணர வைப்பதன் மூலம், மதங்களுக்கு இடையேயான குரோதத்தையும், விரோதத்தையும் துவேசத்தையும் போக்குகிறது.

உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், முருகனை வணங்குபவர்கள் கணபதியை வணங்குபவர்களை வெட்டிக்கொலை செய்ததுமில்லை. கணபதியை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள் மீது குண்டு வீசியதுமில்லை. விஷ்ணுவை வணங்குபவர்கள் காளியை வணங்குபவர்களது கோவிலின் உள்ளே சென்று சிலைகளை உடைத்ததுமில்லை. ஏன் எனில், எல்லா இந்துக்களும் அடிப்படையில் எந்த் உருவத்தில் இறைவனை வணங்கினாலும் வணக்கத்தை பெறுவது ஒரே இறைவனே என்ற பேருண்மையை அறிந்திருப்பதுதான். கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான். மனிதனின் வேண்டுதல் மாறலாம். இறை மாறுவதில்லை என்பதை இந்து அறிந்திருக்கிறான்.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்று இந்துமத வேதங்கள் இறையை குறிப்பிடுகின்றன. நல் வினை தீவினை ஆகிய இரண்டுமே தொடாத இறையை இந்து மதம் கூறுகிறது. இறை வரையறைக்குள் வராது. வரையறுக்கவும் முடியாது.

இறை இதுதான் என்று நாம் வரையறுக்கும் எல்லா வரையறைகளும் இறையை கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்து ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? மனிதனுக்குத்தான் கடவுளின் தேவை இருக்கிறது. என்ன தேவையோ அந்த தேவை காரணமாக கடவுளை ஒரு உருவகப்படுத்திக்கொள்கிறான். சரஸ்வதியாக கடவுளை பார்ப்பவனுக்கு கடவுள் கல்வியை அளிக்கிறார். நீங்கள் யார்? உன் தந்தைக்கு நீங்கள் மகன், உங்கள் அண்ணனுக்கு நீங்கள் தம்பி. உங்கள் மகனுக்கு நீங்கள் தந்தை. உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன். ஆள் ஒரே ஆள்தானே? ஒரு சாதாரண மனிதனான உங்களுக்கு இத்தனை முகங்கள் இருக்குமென்றால், இப்பேரண்டத்தை படைத்த,கற்பனைக்கும் எட்டாத இறைக்கு எத்தனை முகங்கள் இருக்கும்? சாதாரண மக்கள் நாம். அந்த பணிவுடன் தான் நாம் இறைக்கு திருமணம் செய்துவிக்கிறோம். பாடல்களை பாடுகிறோம். அது நம்மால் சந்தோஷப்படுகிறதா? அல்ல. நாம் சந்தோஷப்படுகிறோம். நம் சந்தோஷத்துக்காக இவற்றை செய்கிறோம்.
நம் சந்தோஷமே மக்களின் சந்தோஷமாக சமுதாயத்தின் சந்தோஷமாக விரிகிறது.

தெய்வமென்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசன் இந்துமதத்தின் ஆணி வேரை சொன்னார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் திருமூலரும் சொன்னார்.

அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை அழைத்தாலும் அது இறைவனை எந்த உருவிலும் வணங்குவதை தடை செய்வதில்லை. தடை செய்வதன் மூலம் வன்முறையே பெருகும். நான் சரி நீ தவறு என்ற வாதமும் பிரதிவாதமுமே வரும். அது வன்முறையிலேயே முடியும். ஏனெனில், ஒரு சாதாரண மனிதனுக்கு பல முகங்கள் இருப்பதுபோல, இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களில் வணங்கினாலும் ஒரே இறைவனையே அத்தனை வணக்கங்களும் அடைகின்றன என்பதை இந்து ரிஷிகள் கூறி மக்களை வளப்படுத்தி சமுதாயத்தினை வளப்படுத்தியிருக்கின்றனர்.
இதனால்தான் இந்து மதத்தை சார்ந்த அம்பேத்கார், காந்தியடிகள் போன்ற பெரியவர்கள், ஞானிகள் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய மதங்களை பாராட்டவும், அந்த மதங்களை நிறுவியவர்களை பாராட்டவும் அஞ்சியதில்லை. ஏனெனில், எந்த உருவில் வணங்கினாலும் இறை ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்தந்த மதத்தினரோ, தங்கள் மதங்களை பரப்ப விளம்பரங்களாக அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது குறுகிய மனத்தையே காட்டுகிறார்கள்.
எனதன்பின் இஸ்லாமிய நண்பர்களே..

இந்து வேதம் உபநிஷதம், கீதை, திருமந்திரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்களில் கடவுளைப் பற்றிய அகமன வெளிப்பாடுகளுக்கும், பல உருவங்களில் இறையை வணங்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அப்போது, தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

முடிவாக..

இந்து மதம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இந்து மதம் தன் அடிப்படையாக உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. இந்துக்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இந்து ஆன்மீக பாரம்பரியத்துக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இந்து மதத்தைக் குறைகூற முடியாது.

இந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.

உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயர் சொல்லாவிடினும் இந்துக்களே என்றாலும், அதிலுள்ள மேலான சிந்தனைகளையும், ஆன்மீக பாரம்பரியத்தையும், ஞானத்தையும் உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.

அன்புள்ள நண்பர்களே,

உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கொண்டுவந்தவர்கள், அதற்கு காரணம் இந்துமதம் தான் என்று பிரச்சார மாயை செய்து உண்மையை மறைக்கப்பார்ப்பார்கள். அதன் மூலம், எங்கள் மார்க்கத்திலேயே ஆண்டான் அடிமை போன்ற வித்தியாசம் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து, 6 வயதுள்ள பெண் பிள்ளைகளை அடிமைப்படுத்தி நாலாந்தாராமாக 60 வயது கிழவனுக்கு மணம் செய்து கொடுப்பதையும், பள்ளி செல்லும் சிறுவன் இடுப்பில் குண்டு கட்டி மார்க்கத்துக்காக தற்கொலை செய்வதையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.

இந்துமதம் வாருங்கள். இறை வழி சேருங்கள்.

நன்றி தியாகு

--
இந்த மிகச்சிறப்பான கட்டுரையை பின்னூட்டமாக எழுதி அளித்து அதனை தனி பதிவாக வெளியிட அனுமதித்த தியாகு அய்யா அவர்களுக்கு நன்றி

எழுதியவர்: எழில் at Tuesday, December 05, 2006