Saturday, July 22, 2006

பெரியக்கா

வருடத்தில்ஏதாவது ஒரு முழுநிலவு நாளில் நாங்கள் குடும்பமாக மண்டலாய்ப் பிள்ளையார் கோவிலில் இருப்போம்.ஈச்சை மரங்கள், பாலை மரங்கள் என பலவித பழ மரங்களும் செடிகளும், புதர்களும் மண்டியிருக்கும் காடு. அதன் நடுவே பிள்ளையார் கோவில். மற்றைய கோவில்களைப் போலல்லாது இங்கு பிள்ளையார் மேற்கே பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் தங்குவதற்காக மண்டபங்கள் இருக்கின்றன. நாங்கள் அங்கே போனால் கிழக்குப் புறமாக உள்ள மண்டபத்தில்தான் தங்குவோம்.எனது பாட்டனார் காலத்தில் இருந்தே மண்டலாய்க்குப் போய் ஒரு நாள் தங்கியிருந்து மண்டகப்படி செய்து அன்னதானம் வழங்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இரவில்தான் பூசை நடக்கும். காடுகளில் பகல் முழுக்கத் தேடி எடுத்து வந்த காய்ந்த மரங்களை மண்டபத்துக்கு முன்னால் போட்டு எரித்து, அதில் குளிர் காய்ந்த படியே முழுநிலவில் பூசைச் சோற்றை அம்மா குழைத்துத் தர கைகளில் வாங்கி சாப்பிடும் போது இருக்கும் ருசியே தனி.


More here....

No comments: